தாயை அடித்து கொன்ற மகனுக்கு ஆயுள்.... திருச்சி கோர்ட் தீர்ப்பு

By senthilvel – June 23, 2022

146

Share E-Tamil Newsதிருச்சி லால்குடி பம்பரசுருட்டி பகுதியை சேர்ந்தவர் அந்தோணிசாமி. இவரின் மனைவி கலாராணி(63). இவர்களின் மகன் ராஜ்குமார்(43). கடந்த 2020ம் ஆண்டு மே மாதம் தாய் கலாராணி, தன்னுடைய மகன் ராஜ்குமாருக்கு சாப்பாடு கொடுத்த போது அவர் பணம் கேட்டு உள்ளார். பணம் தர மறுக்கவே உருட்டு கட்டையால் தாயை அடித்து கொலை செய்து உள்ளார். வழக்கு பதிவு செய்த லால்குடி போலீசார் ராஜ்குமாரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு விசாரணையானது திருச்சி கோர்ட் ஜேஎம் 3ல் நடைபெற்றது. விசாரணையில் முடிவில் இன்று நீதிபதி  தங்கவேல் தீர்ப்பளித்தார். அதில் தாயை கொலை செய்த ராஜ்குமாருக்கு ஆயுள் தண்டனையும் 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்தார். இதனை தொடர்ந்து ராஜ்குமார் சிறையில் அடைக்கப்பட்டார்.