By செந்தில்வேல் – June 23, 2022
Share E-Tamil News
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் நாள்தோறும் சிகிச்சைக்காக நாள்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்வர். இந்த நிலையில், இன்று காலை அரசு மருத்துவமனையில் உள்ள புதிய கட்டிடத்தின் பின்பகுதியில் இளைஞர் ஒருவர் மயங்கிய நிலையில் கிடந்தார். இதுகுறித்து பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, இளைஞரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவரிடம் கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர்.
இதனை அடுத்து, உயிரிழந்த நபரின் உடமைகளில் தேடியபோது, அவர் ஆத்துபொள்ளாச்சி பகுதியை சேர்ந்த கந்தகுமார்(38) என்பதும், இவர் தச்சு வேலை செய்து வந்ததும் தெரியவந்தது. மேலும், கந்தகுமார் மீது காவல் நிலையத்தில் திருட்டு வழக்கு உள்ளதும் தெரியவந்தது. இதனை அடுத்து, போலீசார் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக சவக்கிடங்கிற்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, அவர் உயிரிழப்புக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.