பட்டா மாற்றத்திற்கு 25 ஆயிரம் லஞ்சம் பெற்ற எழுத்தர் கைது...

By செந்தில்வேல் – June 23, 2022

186

Share E-Tamil Newsவிழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள ஆத்துர் பகுதியை சேர்ந்தவர் யுவராஜ். இவரது தாயார் கலைமணிக்கு, கடந்த 2007ஆம் ஆண்டு அரசு சார்பில் வழங்கப்பட்ட இலவச வீட்டுமனை பாட்டாவை, கிராம கணக்கு மற்றும் வட்ட கணக்கில் பெயர் திருத்தம் செய்வதற்காக திண்டிவனம் வட்டாட்சியர் அலுவலகத்தை அணுகி உள்ளார். அப்போது, அங்கு அலுவலக பதிவறை எழுத்தராக பணிபுரியும் சிவஞானவேலு என்பவர் கணக்குகளை எடுத்துத்தர தனக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம் தர வேண்டும் என கேட்டதாக கூறப்படுகிறது. லஞ்சம் தர விரும்பாத யுவராஜ், இது தொடர்பாக விழுப்புரம் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளித்தார். அதன் பேரில், லஞ்ச ஒழிப்பு போலீசார் ரசாயனம் தடவிய ரூ.5,000 பணத்தை யுவராஜிடம் வழங்கி, அதனை எழுத்தரிடம் வழங்கும்படி அறிவுறுத்தினர். அதன்படி, யுவராஜ் வட்டாட்சியர் அலுவலகத்தில் வைத்து எழுத்தர் சிவஞானவேலுவிடம் லஞ்ச பணத்தை வழங்கினார்.

அப்போது, அலுவலகத்தில் மறைந்திருந்த லஞ்ச ஓழிப்புத்துறை ஏஎஸ்பி தேவநாதன் தலைமையிலான போலீசார், சிவஞானவேலுவை கையும் களவுமாக கைது செய்து, அவரிடமிருந்த லஞ்சப் பணத்தை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் திண்டிவனம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.