அடுத்தது என்ன? எடப்பாடி, ஓபிஎஸ் ஆதரவாளர்களுடன் ஆலோசனை

By senthil – June 23, 2022

74

Share E-Tamil Newsஅதிமுக பொதுக்குழு இன்று காலை பரபரப்புடன் கூடியது. ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் கூட்டம் 35 நிமிடங்களில் முடிந்தது- கூட்டத்தில் இருந்து  ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் வெளியேறினார்.  பின்னர் அவர் தனது இல்லத்தில் வைத்திலிங்கம், மனோஜ்பாண்டியன், ஜேசிடி பிரபாகரன் உள்ளிட்டவர்களுடன் ஆலோசனை நடத்தினர். 

இதுபோல எடப்பாடி பழனிசாமியும் அதனது ஆதரவாளர்களான முன்னாள் அமைச்சர்கள்  வேலுமணி, ஜெயக்குமார், முனுசாமி உள்ளிட்டவர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். 

வரும் 11ம் தேதி மீண்டும் பொதுக்குழு கூடும் என  எடப்பாடி தரப்பு அறிவித்துள்ளதால் அது குறித்து அவர்கள் ஆலோசித்தனர்.  கோர்ட் உத்தரவுக்கு எதிராக பொதுக்குழு செயல்பட்டது தொடர்பாக  கோர்ட் அவமதிப்பு வழக்கு தொடுப்பது தொடர்பாக ஓபிஎஸ் தரப்பினர் ஆலோசித்ததாக தெரிகிறது.

எனவே அடுத்த கட்ட நகர்வு குறித்து நாளை பல தகவல்கள் வெளியாகலாம் என தெரிகிறது.