அவைத்தலைவர் தேர்வு செல்லாது…. கோர்ட் அவமதிப்பு- வைத்திலிங்கம் பேட்டி

By senthil – June 23, 2022

120

Share E-Tamil Newsஅதிமுக துணை ஒருங்கிணைப்பாளரும்,  ஓபிஎஸ் ஆதரவாளருமான  வைத்திலிங்கம்   நிருபர்களிடம் கூறியதாவது:

அதிமுக பொதுக்குழுவில் 23 தீர்மானங்களும் நிராகரிக்கப்பட்டது செல்லாது.தீர்மானங்களை ரத்து செய்ய உரிமை இல்லை.  அவைத்தலைவர் தேர்வும் செலலாது.  புதிதாக கொண்டு வந்த தீர்மானங்களை கண்டித்து வெளிநடப்பு செய்தோம்.அதிமுகவின் நடைமுறைகளை மாற்றியுள்ளனர்.

பொதுக்குழுவில் நடந்தது  சர்வாதிகாரத்தின் உச்சம்.  இதற்கு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்வோம்.  பொதுக்குழுவுக்கு வந்தவர்களில் பலர் கூலிக்கு மாரடிக்கிறவர்கள்.  அவர்கள் உண்மையான பொதுக்குழு உறுப்பினர்கள் அல்ல.

அடுத்தமாதம் பொதுக்குழு கூட்டுவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை. கட்டுப்பாடு இல்லாத காட்டுமிராண்டித்தனமான கூட்டம்.  கூட்டுத்தலைமையுடன் ஒற்றைமையாக இருந்து சிறப்பாக செயல்பட்டால்  மீண்டும் ஆட்சியை பிடிக்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.