By senthil – June 23, 2022
Share E-Tamil News
பொதுக்குழு கூட்டம் முடிந்து கிரீன்வேஸ் சாலையில் உள்ள வீட்டுக்கு வந்த அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியை பிற்பகலில் தமிழக பா.ஜ. தலைவர் அண்ணாமலை, மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி மற்றும் பா.ஜ. நிர்வாகிகள் சிலர் சந்தித்து பேசினர். சுமார் 15 நிமிடங்கள் இந்த சந்திப்பு நடந்தது.
ஜனாதிபதி தேர்தலில் பா.ஜ. வேட்பாளர் திரவுபதி முர்மு நாளை வேட்புமனு தாக்கல் செய்ய உள்ள நிலையில் அவருக்கு ஆதரவு அளிக்கும்படியும் வேட்புமனு தாக்கல் செய்யும் நிகழ்ச்சிக்கு அதிமுக நிர்வாகிகளை அனுப்பி வைக்கும்படியும் கேட்டதாக தெரிகிறது.
இதுபோல ஓபிஎஸ்சையும் அவரது இல்லத்துக்கு சென்று அண்ணாமலை சந்தித்தார்.