By செந்தில்வேல் – June 23, 2022
Share E-Tamil News
பள்ளி மாணவர்கள் மாயம்.... திருச்சி மாவட்டம், துறையூர் உப்பிலியபுரம் பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகர். இவரது மகன் பாஸ்கர் துறையூர் பகுதியில் உள்ள வித்யா மந்திர் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் 10ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான முடிவுகள் வெளியானது. அதில் பாஸ்கர் தேர்ச்சி பெறாததால் வீட்டிற்கு திரும்பிச் செல்லாமல் மாயமாகியுள்ளார் இதுகுறித்து சந்திரசேகரபுரம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து மாயமான பள்ளி மாணவர்களை தேடி வருகின்றனர்.
லுங்கி டூவீரில் சிக்கியவருக்கு படுகாயம்.... திருச்சி, தாத்தையங்கார்பேட்டை பகுதியை சேர்ந்தவர் அசோகன் இவரது உறவினரான நடேசன் என்பவர் நேற்று தன்னுடைய டூவீலரில் அவரது உறவினரான சதீஷ் (17) என்ற சிறுவர்களுடன் மகாதேவி கிராமத்திலுள்ள மலையப்ப நகர் காலனிக்கு சென்றுள்ளனர். அப்போது நடேசன் அணிந்திருந்த லுங்கி டூவீலரில் முன் சக்கரத்தில் சிக்கி எதிர்பாராதவிதமாக இருவரும் கீழே விழுந்துள்ளனர். இதில் நடேசன் தலையில் பலத்த காயத்துடன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சதீஷ் காயங்களுடன் துறையூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து அசோகன் கொடுத்த புகாரின் அடிப்படையில் தாத்தையங்கார்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
வரதட்சனை கொடுமை... திருச்சி மாவட்டம், தீரன் நகர் பகுதியை சேர்ந்தவர் அனு இவர் கடந்த 9 வருடங்களுக்கு முன்பு சுரேஷ் குமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. இதற்கிடையில் தொடர்ந்து சுரேஷ்குமார் அனுவிடம் கூடுதல் வரதட்சணை கேட்டு தொந்தரவு செய்து வந்ததோடு அனு மற்றும் அவரது குழந்தையையும் சரியாக பராமரிக்காமல் இருந்து வந்துள்ளார். மேலும் தொடர்ச்சியாக வரதட்சணை கேட்டு கொடுமை செய்து வந்ததால் ஜீயபுரம் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேசனில் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து சுரேஷ்குமாரிடம் விசாரணை செய்து வருகின்றனர்.