கரூர் ரயில்வே ஸ்டேசனில் முருங்கை உற்பத்தி பொருட்கள் விற்பனை துவக்கம்......

By செந்தில்வேல் – June 23, 2022

56

Share E-Tamil Newsஉள்ளூா் உற்பத்தி பொருள்கள் விற்பனையை ஊக்குவிக்கும் பொருட்டு இந்திய ரயில்வே வாரியம் "ஒரு ரயில் நிலையம் ஒரு பொருள்" என்ற திட்டத்தில் ரயில் நிலையங்களில் குறிப்பிட்ட பொருள்களை விற்க அனுமதி வழங்கி வருகிறது. அந்த வகையில் தெற்கு ரயில்வே சேலம் கோட்டத்திற்குள்பட்ட ரயில் நிலையங்களில் குறிப்பிட்ட உள்ளூா் பொருள்களை விற்க அனுமதி வழங்கியுள்ளது. கரூர் 

மாவட்டத்திற்கு உட்பட்ட ஈசநத்தம் பகுதி விவசாய உற்பத்தியாளர்கள் கூட்டுறவு அமைப்பின் சார்பாக முருங்கையினால் ஆன உற்பத்திப் பொருட்களான, மதிப்பு கூட்டு பொருட்களை விற்பனை செய்யும் விற்பனையகம் இன்று திறந்துவைக்கப்பட்டது. 15 நாட்கள் செயல்படும் இந்த விற்பனையகத்திற்கு தெற்கு ரயில்வே சார்பில் ஆயிரம் ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கரூர் ரயில் நிலைய மேலாளர் ராஜாராம் முதல் விற்பனையை துவங்கி வைத்து பயணிகளுக்கு பொருட்களை வழங்கினார்.