தில்லைநகர் போஸ்ட் ஆபீஸ் மீண்டும் பழைய இடத்திலேயே வேண்டும் - பொதுமக்கள் கோரிக்கை

By senthilvel – June 23, 2022

88

Share E-Tamil Newsதிருச்சி தில்லைநகர் போஸ்ட் ஆபீஸ் மாநகராட்சிக்கு சொந்தமான கட்டிடத்தில் 7வது கிராஸ் பகுதியில் செயல்பட்டு வந்தது. அங்கு புதிய கட்டிடம் கட்டப்பட்டதால் போஸ்ட் ஆபீஸ் தற்போது 7வது கிராஸ் தெற்கு விஸ்தரிப்பு துாக்குமேடை என்ற பகுதிக்கு மாற்றப்பட்டு உள்ளது. அந்த இடம் தில்லைநகர் மெயின் சாலையில் இருந்து சற்று தொலைவில் இருப்பதால், பெரும்பாலானவர்கள் போஸ்ட் ஆபீஸ் இருக்கும் இடத்தை கண்டு பிடித்து வருவதற்கு தடுமாற்றம் ஏற்படுகிறது. இந்த இடத்திற்கு போஸ்ட் ஆபீஸ் சென்றதில் இருந்து தொந்தரவு அதிகரித்து உள்ளதாக பொதுமக்கள் தொிவிக்கின்றனர். போஸ்ட் ஆபீஸ் சுற்றியுள்ள பகுதியில் வசிப்பவர்கள் கட்டிலை போட்டு படுத்து

கிடப்பதாகவும், போஸ்ட் பாக்சை சுற்றி இருசக்கர வாகனங்கள் நிறுத்தி  வைப்பதனால்,  தபால் இட செல்வது சிரமமாக உள்ளது. மேலும் அருகில் உள்ள தண்ணீர் தொட்டியை சுற்றி எப்போதும் கூட்டமாக நிற்கும் ஒரு சிலர் ஆபாச வார்த்தைகளால் ஒருவருக்கொருவர் வசைபாடி கொள்வதால் அந்த பக்கம் கடந்து செல்வதற்கு தயக்கமாக உள்ளது என்று தொிவிக்கின்றனர். ஏற்கனவே போஸ்ட் ஆபீஸ் இயங்கி வந்த இடத்தில் தற்போது மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் இயங்கி வருகிறது. அந்த கட்டிடத்திலேயே மாநகராட்சி போஸ்ட் ஆபீஸ்க்கு இடம் ஒதுக்கி தந்தால் பொதுமக்களின் சிரமங்கள் தவிர்க்கப்படும் என்று தொிவிக்கின்றனர்.