தாய்- சகோதரியை கத்தியால் குத்திய கல்லூரி மாணவன்....

By செந்தில்வேல் – June 23, 2022

88

Share E-Tamil Newsகுஜராத் மாநிலம் வதோதரா மாவட்டத்தில் உள்ள வர்ணமாவில் கல்லூரியில் பயிலும் மாணவன் ஒருவன் தனது சகோதரியை வீட்டிற்கு வெளியே  பலமுறை  கத்தியால் குத்திய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. அப்போது தனது தாயையும் கத்தியால் தாக்கியுள்ளான். இதில் மாணவனால் காயமடைந்த அவனது தாயும், சகோதரியும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தகராறின் போது காயமடைந்த மாணவன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தான். இதனையடுத்து தகவல் அறிந்த போலீசார், மானவனை கைதுசெய்தனர். இச்சம்பவம் குறித்து போலீசார் கூறியதாவது.... குற்றம் சாட்டப்பட்டவர் கடந்த சில நாட்களாக சில நிதிப் பிரச்சினைகளால் மன உளைச்சலில் இருந்ததாகவும், இதனால் வீட்டில் ஏற்பட்ட பிரச்சினையில் அவரது குடும்ப உறுப்பினர்களைத் தாக்கியதாகவும் போலீசார் தெரிவித்தனர். மேலும் மாணவன் மனநலம் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.