ஒரே படத்தில் மீண்டும் இணைந்த இளையராஜா – யுவன்....

By செந்தில்வேல் – June 23, 2022

92

Share E-Tamil Newsஇயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் கடைசியாக வெளியான மாநாடு, மன்மதலீலை ஆகிய படங்கள் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வெற்றியை பெற்றுவிட்டது. இந்த வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக வெங்கட் பிரபு தெலுங்கு நடிகர் நாக சைதன்யா வை வைத்து ஒரு படம் இயக்கிவருகிறார்.

இந்த படம் நாக சைதன்யாவின் 22-வது படம் என்பதால் படத்திற்கு தற்காலிகமாக “NC22” தலைப்பு வைக்கப்பட்டிள்ளது. இந்த படத்தை ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் நிறுவனம் தயாரிக்கிறது.  படத்தில் நாக சைதன்யாவிற்கு ஜோடியாக நடிகை கீர்த்தி ஷெட்டி நடித்து வருகிறார்.

இந்த நிலையில், இந்த படத்திற்கு யார் இசையமைக்க போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்திருந்த நிலையில், ஒருபக்கம் தமன் என்றும் ஒரு பக்கம் பிரேம் ஜி, இல்லை வழக்கம் போல வெங்கட் பிரபு படத்திற்கு இசையமைக்கும் யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கப்போவதாகவும் தகவல்கள் பரவி வந்தது.

இதனையடுத்து, தற்போது படத்திற்கு யார் இசையமைக்க போகிறார் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படத்திற்கு இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜாவும், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவும் சேர்ந்து இசையமைக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்பு ஏற்கனவே இளையராஜா, யுவன் 2 பேரும் இணைந்து மாமனிதன் படத்திற்கு இசையமைத்திருந்தார்கள். இந்த படத்திலிருந்து வெளியான பாடல்கள் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து மீண்டும் 2 பேரும் இணைந்து ஒரு படத்திற்கு இசையமைப்பதால் படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.