ஓபிஎஸ் சென்ற வேன் டயர் பஞ்சர்...... ஈபிஎஸ் ஆட்கள்தான் காரணம் என குற்றச்சாட்டு

By senthilvel – June 23, 2022

352

Share E-Tamil Newsஅ.தி.மு.க. பொதுக்குழு நடந்து கொண்டிருக்கும் போது ஓ.பன்னீர்செல்வம் அக்கூட்டத்தில் இருந்து வெளியேறினார். அவருடன் ஆதரவாளர்கள் வைத்திலிங்கம், ஜே.சி.டி. பிரபாகர், மனோஜ் பாண்டியன் ஆகியோரும் வெளியேறினார்கள். ஓ.பன்னீர்செல்வம் மண்டபத்தை விட்டு வெளியே வந்த போது தொண்டர்கள் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பினார்கள். அவர் டெம்போ டிராவலர் வேனில் இன்று வந்திருந்தார். அந்த வேனில் ஏறி வீடு திரும்புவதற்காக ஓ.பன்னீர்செல்வம் சென்றார். ஆனால் அவரது வேன் டயர் பஞ்சர் ஆகி இருந்தது. எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் தான் வேனை பஞ்சர் செய்து காற்றை வெளியேற்றி விட்டதாக ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் தெரிவித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. ஓ.பன்னீர்செல்வம் வேறு வாகனத்தில் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.