திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு கணவன்-மனைவி தீக்குளிக்க முயற்சி.... - பரபரப்பு

By senthilvel – June 23, 2022

116

Share E-Tamil Newsதிருச்சி மாவட்ட லால்குடி கூடலுார் பகுதியை சேர்ந்தவர் சிவனேசன். இவர் இன்று தனது மனைவி ரேவதியுடன் வந்து திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்றார். அங்கு பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி, தண்ணீர் ஊற்றி காப்பாற்றினர். பின்னர் அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில்......... கூடலுால் கிராமத்தில் தங்களுக்கு சொந்தமான நிலத்திற்கான பொதுப்பாதை தொடர்பாக கோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில் ஊராட்சி மன்ற தலைவர் முருகவேல்

பாதையை அடைக்க முயற்சித்து வருகிறார். மேலும் பள்ளிக்கான மதில் சுவரும் எடுக்கப்பட்டு வருகிறது. பொதுப்பாதையை விடுத்து மதில் சுவர் எடுக்க வேண்டும் என்று கோரிக்கையுடன் வந்ததாக கூறினார். இது குறித்து ஏற்கனவே மனு கொடுத்துள்ளதாகவும் அவர் தொிவித்தார். கணவன்-மனைவி தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.