By senthilvel – June 22, 2022
Share E-Tamil News
அதிமுக உள்கட்சி தேர்தலை எதிர்த்து கட்சி உறுப்பினர்கள் ராம்குமார் ஆதித்தன் மற்றும் சுரேன் பழனிச்சாமி ஆகியோர் தொடர்ந்த வழக்குகள், அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் எனவும், கட்சி விதிகளில் திருத்தம் செய்ய தடை விதிக்க வேண்டும் என்றும் இருவர் சார்பிலும் இடைக்கால மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதேபோல தணிகாச்சலம் என்பவரும் அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்கக் கோரி வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்குகள், நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்னிலையில் விசாரணைக்கு வருவதற்கு பட்டியலிடப்பட்டிருந்தன. இந்த வழக்கு விசாரணை இன்று நடைபெற்றது. 3 மணி நேரத்திற்கும் மேலாக வழக்கு விசாரணை நடைபெற்றதால் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது. அதன் பின்னர் நீதிபதி வழங்கிய தீர்ப்பில் .... அதிமுக பொதுக்குழு கூட்டம் திட்டமிட்டபடி நாளை நடத்தலாம் என்று உத்தரவிட்டார்.