பிரபுதேவா பூதமாக அசத்தும் மை டியர் பூதம் ரிலீஸ் தேதி அப்டேட்....

By செந்தில்வேல் – June 21, 2022

56

Share E-Tamil Newsநடன இயக்குனரான பிரபுதேவா அதையடுத்து இயக்கத்தில் களமிறங்கி வெற்றிப் படங்களைக் கொடுத்தார். தற்போது முழுவதுமாக நடிப்பில் களமிறங்கியுள்ளார். மஞ்சப்பை, கடம்பன் ஆகிய படங்களை இயக்கிய என்.ராகவன் இயக்கத்தல் பிரபுதேவா நடித்துள்ள திரைப்படம் ‘மை டியர் பூதம்’.  இந்த படத்தில் பிரபுதேவாவுக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடித்துள்ளார்.காமெடி மற்றும் பேண்டஸி கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்தை அபிஷேக் பிலிம்ஸ் சார்பில் ரமேஷ் பி பிள்ளை தயாரித்து வருகிறார். அஷ்வந்த், பரம் குகனேஷ், சாத்விக், சக்தி, கேசிதா உள்ளிட்டோரும் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். 

My dear bootham

டி. இமான் இசையில் உருவாகி வரும் இப்படத்திற்கு எஸ்.கே.செல்வகுமார் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார். அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டுள்ள இப்படம் தற்போது ரிலீசுக்கு தயாராகியுள்ளது. தற்போது இப்படத்தின் ரிலீஸ் குறித்த அப்டேட் கிடைத்துள்ளது. இந்தப் படத்தின் தியேட்டர் ரீலிஸ் உரிமைகளை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளனர். படம் வரும் ஜூலை 15-ம் தேதி வெளியாக இருப்பதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.