திருச்சி பெண் அதிகாரிகள் பத்தி தான்... சுப்புனி காப்பிக்கடை பெஞ்ச்சில் பேச்சு...

By செந்தில்வேல் – June 21, 2022

4450

Share E-Tamil Newsநன்றி - அரசியல் அடையாளம்.. 

 

 ‘ யோவ் சுப்புனி காப்பிய கொஞ்சம் ஆத்திக்கொடு... ரொம்ப சூடா இருக்கு’ என பொன்மலை சகாயம் சொல்லி முடிக்க ’ வாட்ஸ்அப் பாக்க முடியல சகாயம் அதிமுக மேட்டருங்க அனல் பறக்குது’ என்றார் சந்துக்கடை காஜாபாய். ‘ ஆமா பாய், எப்படியும் 23ம் தேதி பொதுக்குழு கூட்டத்த நடத்திடக்கூடாதுனு ஒபிஎஸ் தரப்பும், எப்படியாவது நடத்திடனும்னு இபிஎஸ் தரப்பும் மும்முரமாக இருக்குறதா சொல்றாங்க’ என ஸ்ரீரங்கம் பார்த்தசாரதி சொல்லி முடிக்க ‘ ஆமா பொதுக்குழு கூட்டம் நடத்திட்டா போதும் சக்சஸ் பண்ணிடலாம்னு வார்த்தைகள எதுவும் விடாம இபிஎஸ் தரப்பு அடக்கி வாசிக்கிறதா சொல்றாங்க சாமி. ஒவ்வொரு மாவட்டத்திலும் நிர்வாகிங்கள இழுக்குற வேலய 2 ஆட்களும் செய்றாங்க’ என பார்த்தா சொல்லி முடிக்க .. ‘ அதோட ஒரே கார்ல வந்துட்டு இப்படி நம்மள கவுத்துப்புட்டாரேனு வைத்தி பாக்கறவங்ககிட்டயெல்லாம் புலம்புறாராம்’ என்றார் பொன்மலை சகாயம்.. ‘ இப்படி அரைகுறையா எதையும் சொல்லாதேனு சொல்லியிருக்கேன் சகாயம்.. முழுசா சொல்லுயா’ என சந்துக்கடை காஜாபாய் கோபப்பட... ‘‘ டென்ஷன் ஆகாத பாய்,  முக்கிய நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னையில நடந்துச்சுல. அந்த கூட்டத்துக்கு தன்னுடைய நண்பர்களுடன் துணை ஒருங்கிணைப்பாளர் வைத்தியலிங்கம் போனார். அந்த கார்ல திருச்சி மாஜியும் இருந்து இருக்கார். கூட்டம் ஆரம்பிச்சு ஒற்றை தலைமை மேட்டர் பரபரப்பா ஒடிகிட்டு இருந்தப்ப... தன்னுடன் கார்ல வந்த நண்பரை கண்ணை காண்பித்து பேசுங்கன்னு வைத்தி சொல்லியிருக்கார்... ‘ என பொன்மலை சகாயம் நிறுத்த .. ‘ சகாய... ம்ம்னு’ திரும்பவும் காஜாபாய் டென்ஷன் ஆக.. ‘ இரு பாய் இரு பாய் ... வைத்தியலிங்கத்தோட கார்ல போய்யிருந்த திருச்சி மாஜி யாருமே எதிர்பார்க்காத வகையில மாமா மச்சான் உறவ வச்சு இபிஎஸ்சுக்கு ஆதரவாக பேசியிருக்கார்.. கூடவே இருந்து இப்படி கவுத்துப்புட்டாரே இந்த ஆளுனு வைத்தி ரொம்ப அப்செட் ஆகிட்டதா சொல்றாங்க’ என சகாயம் சொல்லி முடிக்க.. 
‘திருச்சி பெண் இன்ஸ்பெக்டர் அட்ராசிட்டி தாங்க முடியலயாம்னு‘ ஆரம்பிச்சார் காஜாபாய்  ‘ மலைக்கோட்டை மாநகரத்துல ரயில்வேயில இருக்குற பெண் இன்ஸ்பெக்டர் ஏற்கனவே வக்கீல் ஒருத்தர் மேல எப்ஐஆர் போட்டதா சர்ச்சை ஆகி மேலிடத்துல எழுதி கொடுத்து வந்தாங்க.. வந்தவங்க கொஞ்சம் அடக்கி வாசிப்பாங்கனு பாத்தா கூட வேல பாக்குறவங்கள பாடாபடுத்தி எடுக்குறாங்களாம்..’ என சொல்லி முடிக்க ‘
அதே மாதிரி பயிற்சி வகுப்புகள் நடத்தாம பொய் பில் போடுறதா..இன்னொரு திருச்சி பெண் அதிகாரிய பத்தியும் பரபரப்பபா பேசிக்கிறாங்க பாய்’  என பொன்மலை சகாயம் திரும்பி ஆரம்பிக்க.. ‘ என்ன சாமி சொல்ற யாரு?’ என காஜா பாய் ஆர்வமா கேக்க.. ‘ அங்கன்வாடி பணியாளர்கள் கிட்ட தான் இதபத்தி கேக்கணும் பாய்.. அதே மாதிரி  வேண்டிய ஏரியாவுக்கு டிரான்ஸ்பர் போட 50 ஆயிரம் வரை வாங்குறதாகவும் சொல்றாங்க’ என சொல்லி முடிக்க சுந்தரி நீயும் சுந்தரயானும் சேர்ந்திருந்தா ஓணம்’ என ஸ்ரீரங்கம் பார்தா பாட ஆரம்பிக்க சுப்புனி காப்பிக்கடை பெஞ்ச் காலியானது.