பொதுக்குழு நடக்காது.. நடந்தால் புறக்கணிப்பு ஆதரவாளர்களுக்கு ஓபிஎஸ் தரப்புக்கு உத்தரவு...

By செந்தில் வேல் – June 21, 2022

192

Share E-Tamil Newsஅ.தி.மு.க., இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமிக்கு, ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் எழுதியுள்ள கடிதத்தில்... ஜெயலலிதா, பல முறை பொதுக்குழு நடத்திய போதெல்லாம், சிறப்பு அழைப்பாளர்கள் அழைக்கப்பட்டனர். இப்போது, அதே மண்டபத்தில் இடமில்லை என கூறுவது, ஏற்புடையதாக இல்லை என, தங்கள் ஆதங்கத்தை தெரியப்படுத்துகின்றனர்.மேலும், முன்னறிவிப்பு இல்லாமல், ஒற்றைத் தலைமை மற்றும் இரட்டைத் தலைமை குறித்து, சில நிர்வாகிகள், சட்ட விதிகளை உணராமலும், அறியாமலும் கருத்து தெரிவித்துள்ளனர். இதனால், கட்சி தொண்டர்கள் கொதித்து போய் உள்ளனர். கட்சியினர் மத்தியில் குழப்பமான சூழ்நிலை நிலவுகிறது. இதன் காரணமாக, சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்படும் சூழ்நிலை உருவாகி உள்ளது.
தற்போதுள்ள அசாதாரண சூழ்நிலையில், அமைதி காப்பது அவசியம். எனவே, கட்சி நலன் கருதி, 23ம் தேதி நடக்க உள்ள, செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தை, தற்போதைக்கு தள்ளி வைக்கலாம். அடுத்த கூட்டத்திற்கான இடம், நாள் மற்றும் நேரத்தை, நாம் இருவரும் கலந்தாலோசித்து, பின்னர் முடிவு செய்யலாம்.என கூறியுள்ளார். பன்னீர்செல்வம் எழுதிய கடிதத்தில், துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் கையெழுத்திட்டுள்ளார். இந்த கடிதத்தின் நகல், அனைத்து நிர்வாகிகள், செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது..  இந்த நிலையில் அ.தி.மு.க., பொதுக்குழு கூட்டத்திற்காக நாளை இரவே சென்னை வருமாறு, இபிஎஸ் தரப்பில் அழைப்பு விடப்பட்டுள்ளது. எப்படியும் பொதுக்குழு கூட்டத்தை நடத்தியே ஆகவேண்டும் என்றும், எந்த ஒரு சூழ்நிலை நடந்தாலும் சட்டம் ஒழுங்கு பிரச்சனைக்கு இடம் கொடுக்க கூடாது எனவும் இபிஎஸ் தரப்பு உத்தரவிட்டுள்ளது. அதே சமயம் எப்படியும் பொதுக்குழு கூட்டத்தை தங்களது ரத்து செய்து விடும் என்கிற நம்பிக்கையில் ஓபிஎஸ் தரப்பினர் அலட்சியமாக உள்ளனர்.. ஒருவேளை நடந்தால் அதில் கலந்து கொள்ளாமல் புறக்கணிக்கவும் ஓபிஎஸ் தரப்பு முடிவு செய்துள்ளது...