அசாம் வௌ்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட 2 போலீசார்.....

By செந்தில்வேல் – June 20, 2022

76

Share E-Tamil News



அசாமில் தொடர்ந்து பெய்த கனமழையால், பல பகுதிகளில் வெள்ளமும், ஆங்காங்கே நிலச்சரிவும் ஏற்பட்டது. கனமழை மற்றும் வெள்ளத்துக்கு பலர் உயிரிழந்துள்ளதுடன், லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், மத்திய அசாமின் நாகோன் மாவட்டத்தில் நேற்று இரவு ஏற்பட்ட வெள்ளத்தில் 2 போலீசார் அடித்துச் செல்லப்பட்டனர். இச்சம்பவம் அங்குள்ள கம்பூர் பகுதியில் நிகழ்ந்துள்ளது. இச்சம்பவம் குறித்து போலீசார் கூறும்போது... நேற்று இரவு காவல் நிலையப் பொறுப்பதிகாரி தலைமையிலான கம்பூர் போலீஸ் குழுவானது ஒரு வழக்கை விசாரிக்க அங்குள்ள பகுதிக்கு சென்றுள்ளனர். அப்போது 2 போலீசார் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டனர். இதையடுத்து அவர்களை தேடும்போது, ஒருவர் சடலமாக மீட்கப்பட்டார். மேலும் ஒருவரை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.