இந்திய கால்பந்து வீராங்கனை மாரியம்மாளுக்கு மூட்டு சவ்வு தானம் கொடுத்த தந்தை.....

By senthilvel – June 19, 2022

160

Share E-Tamil Newsசங்ககிரியை சேர்ந்த மாரியம்மாள் இந்திய மகளிர் கால்பந்து வீராங்கனையாக விளையாடி வருகிறார். கடந்த 2 ஆண்டுகளாக இந்திய அணிக்காக விளையாடி வரும் அவர் பிரேசில், சுவீடன் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு எதிராக இதுவரை 12 கோல்கள் அடித்துள்ளார். இடதுகால் ஆட்டக்காரரான இவர் சென்னை நேரு ஸ்டேடியத்தில் பயிற்சியில் ஈடுபட்ட போது தவறி விழுந்து அவரின் கால் மூட்டு சவ்வு கிழிந்து விட்டது.  விளையாட்டு மருத்துவத் துறை இயக்குநரும், மூட்டு சீரமைப்பு நிபுணருமான டாக்டர் ஜி.லியோனர்ட் பொன்ராஜ் தலைமையிலான குழுவினர் மாரியம்மாளுக்கு மாற்று சவ்வை பொருத்த நிலை ஏற்பட்டு உள்ளதை கண்டறிந்து உள்ளனர். பொதுவாக கால் முட்டியில் சவ்வு கிழிந்தால் அவர்களது உடலில் இருந்தே சவ்வை எடுத்து பொருத்த முடியும். ஆனால், கால்களை அதிகம் பயன்படுத்தும் கால்பந்து வீராங்கனையான மாரியம்மாளுக்கு அப்படி செய்தால் விளையாடவே முடியாத நிலை ஏற்படும். இது குறித்து டாக்டர்கள்  மாரியம்மாளின் குடும்பத்தினருடன் ஆலோசித்த போது, அவரது தந்தை பாலமுருகன் தனது மூட்டு சவ்வை கொடுக்க முன்வந்தார். இதனை ஒப்புக்கொண்ட டாக்டர்கள் வெற்றிகரமாக அறுவை சிகிச்சையை முடித்து உள்ளனர். இது குறித்து டாக்டர்கள்

கூறும்போது..... உயிருள்ள ஒருவரிடம் இருந்து முட்டி சவ்வை எடுத்து மற்றொருவருக்கு பொருத்தப்பட்டுள்ளது இந்தியாவில் இதுவே முதல்முறை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், தனியார் மருத்துவமனைகளில் இந்த அறுவை சிகிச்சை செய்ய ரூ.3 லட்சம் வரை செலவாகும் எனவும், தற்போது முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீடு திட்டத்தில் இந்த அறுவை சிகிச்சை இலவசமாக செய்யப்பட்டுள்ளது. இன்னும் 6 மாதத்தில் மாரியம்மாள் விளையாட செல்லலாம் என்று கூறினர்.