பிறந்து 2 வாரங்களே ஆன ஆட்டுக்குட்டியின் காது 50 செ.மீட்டர் நீளம்..

By செந்தில் வேல் – June 19, 2022

194

Share E-Tamil Newsபாகிஸ்தான் நாட்டின் கராட்சி மாகாணத்தை சேர்ந்தவர் முகமது ஹசன் நரிஜோ. இவர் தனது வீட்டில் ஆடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில், அவரது ஆட்டுப்பண்ணையில் கடந்த 2 வாரங்களுக்கு முன் ஆடு ஒன்று குட்டியை ஈன்றது. அந்த ஆட்டுக்குட்டியின் காது மற்ற ஆட்டுக்குட்டிகளின் காதை விட மிகவும் நீளமாக இருந்ததை கண்டு உரிமையாளர் மிகவும் ஆச்சரியமடைந்தார். அந்த ஆட்டுக்குட்டிக்கு சம்பா என பெயரிட்ட முகமது ஆட்டுக்குட்டியின் காது எவ்வளவு நீளமாக உள்ளது என ஆச்சர்யத்துடன் அளந்து பார்த்தார். அப்போது தான் ஒவ்வொரு காதும் 19 இன்ச் நீளமாக அதாவது சுமார் 50 சென்டிமீட்டர் நீளமாக இருப்பது தெரியவந்தது. பிறந்து 2 வாரங்களே ஆன ஆட்டுக்குட்டிக்கு 50 சென்டிமீட்டர் நீளமான காது இருப்பது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படத்தியிருக்கிறது....