திருச்சி மாஜிக்கள் 2 பேர் யார் பக்கம்...?

By செந்தில்வேல் – June 17, 2022

566

Share E-Tamil Newsஒற்றைத் தலைமை விவகாரம் அதிமுகவில் கொளுந்து விட்டு எரிந்து கொண்டிருக்கிறது. வரும் 23ம் தேதி நடைபெறும் பொதுக்குழு கூட்டத்தில் ஒருங்கிணைப்பாளர்-இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை நீக்கவும் பொதுச்செயலாளர் பதவியை கொண்டு வரவும் தீர்மானம் நிறைவேற்ற எடப்பாடி தரப்பினர் முடிவு செய்துள்ளாதாக தகவல் வெளியாகியுள்ளது.இந்த நிலையில் அதிமுகவில் இரட்டை தலைமை தான், ஒன்றைத் தலைமைக்கே வாய்ப்பு இல்லை என கூறி ஓபிஎஸ் எரியும் தீயில் எண்ணெய் ஊற்றியிருக்கிறார்.   ஓபிஎஸ்சின் இந்த பேட்டிக்கு இபிஎஸ் தரப்பு எந்த வகையில் பதிலடி கொடுக்கும் என்பது இன்று தெரியும். இந்த நிலையில் திருச்சியில் நேற்று திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் பெல் நிறுவனத்தின் அங்கீகார தொழிற்சங்க தேர்தலுக்கான கூட்டம் நடைபெற்றது. அண்ணா தொழிற்சங்கம் சார்பில் நடத்தப்பட்ட இந்த கூட்டத்திற்கு தெற்கு மாவட்ட செயலாளர் குமார் ஏற்பாடு செய்திருந்தார். இந்த கூட்டத்தில்முன்னாள் அமைச்சரும் எம்பியுமான சிவி சண்முகம் கலந்து கொண்டார்.  இபிஎஸ்-ஓபிஎஸ் அணிகள் பரபரப்பாக நிர்வாகிகளை தங்கள் இழுத்துக்கொண்டிருக்கும் நிலையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் வடக்கு மாவட்ட செயலாளர் பரஞ்சோதி, அமைப்புச் செயலாளர்கள் ரத்தினவேல், வளர்மதி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மேலும் சிவிஎஸ் எம்பியானதற்கு பலரும் நேரில் வந்து வாழ்த்து தெரிவித்தனர். இந்த கூட்டத்திலோ சிவிஎஸ்சை தனிப்பட்ட முறையில் சந்திக்கவோ  முக்கிய நிர்வாகிகளான மாஜி அமைச்சர்களான மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் வெல்லமண்டி நடராஜன், சிவபதி ஆகியோர் வரவில்லை.. அவர்களின் நிலைப்பாட்டை பாக்கும் போது தற்போது துணை ஒருங்கிணைப்பாளருடன் மிகவும் நெருக்கமாக இருக்கும் இருவரும் ஓபிஎஸ் பக்கம் சாய வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன...