By செந்தில் வேல் – June 16, 2022
Share E-Tamil News
நடந்து முடிந்த அதிமுக மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் கூட்டத்தில் ஒற்றைத் தலைமை விவகாரம் பெரிதாக வெடித்தது. இது தொடர்பாக வரும் 23ம் தேதி நடைபெறும் பொதுக்குழுவில் இறுதி முடிவு எடுக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. தற்போதுள்ள, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர்கள் பதவியை நீக்கவும், பொதுச் செயலரை தேர்வு செய்யவும், பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றுவது குறித்து எடப்பாடி தரப்பு ஆலோசித்து வருகிறது. மேலும் ற்றைத் தலைமை குறித்து தீர்மானம் மற்றும் தேவைப்பட்டால் தேர்தல் என நடத்தவும் அவர்கள் தயாராகி வருகின்றனர். இந்த நிலையில் இருதரப்பினர் தரப்பிலும் தீவிர ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த விவகாரத்தில் சுமூக முடிவை ஏற்படுத்த சில நிர்வாகிகள் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளனர். ஓபிஎஸ்சை காமராஜ் மற்றும் உதயகுமார் ஆகியோர் சந்தித்து சமாதானம் செய்தனர். ஆனால் ஓபிஎஸ் எந்தவிதத்திலும் பதில் அளிக்கவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் உள்கட்சி தேர்தல் முறையாக நடத்தப்படாதது குறித்த ஆதாரங்களுடன், பொதுக்குழுவுக்கு நீதிமன்றத்தில் தடை வாங்க, பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் ஆலோசித்து வருகின்றனர்.இரு தரப்பிலும் பேசி சுமுக தீர்வு காணப்பட்டால், தான் 23ம் தேதி திட்டமிட்டபடி பொதுக்குழு கூட்டம் நடக்கும். இல்லையெனில், பொதுக்குழு தள்ளிப் போக வாய்ப்பு உள்ளதாக ஓபிஎஸ் தரப்பில் கூறப்படுகிறது.. இதனிடையே இந்த விவகாரத்திற்கு முற்றுப்புள்ள ி வைக்க எடப்பாடி தரப்பு ஓபிஎஸ்சுக்கு அவைத்தலைவர் பதவி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து ஓபிஎஸ்சிடம் பேச்சுவார்த்தை நடத்த விரைவில் முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, சி.வி.சண்முகம் தலைமையிலான குழுவினர் அவரை சந்திக்க உள்ளதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன..