வைத்திலிங்கத்தை வறுத்தெடுத்த மாஜி எம்பி குமார்.. அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் பரபரப்பு..

By செந்தில்வேல் – June 15, 2022

4450

Share E-Tamil Newsசென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் நேற்று மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்-இபிஎஸ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில்   ஒரு சிலரைத் தவிர மற்ற அனைவரும் அதிமுகவிற்கு ஒற்றைத் தலைமை வேண்டும் என்றும் குறிப்பாக எடப்பாடி பழனிச்சாமியின் தலைமைக்கு ஆதரவு தெரிவித்து பேசினர். இதனால் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான வைத்திலிங்கம் எம்பி, மனோஜ்பாண்டியன், ஜேசிடி பிரபாகரன் உள்ளிட்டோர் அதிர்ச்சியடைந்தனர். இந்த கூட்டம் ஆரம்பித்த நிலையில் ஒவ்வொருத்தவராக பேச ஆரம்பித்தனர். அந்த வகையில் 3வதாக எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவாளரும் திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் எம்பியுமான குமார் பக்கம் மைக் வழங்கப்பட்டது. அப்போது துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் மைக்கை அந்த பக்கம் கொடுங்கள் என மா.செ குமார் பேசுவதை தடுக்கும் வகையில் கூறியதாக தெரிகிறது. உடனே குமார் மைக்கை வாங்கி ஆரம்பத்தி்ல் இருந்தே நீங்கள் திருச்சி அதிமுக அரசியலில்  தலையிடுகிறீர்கள். தற்போது நிர்வாகிகள் தேர்தலின் போதும் தேவையில்லாத வேலைய பார்த்தீர்கள். எங்களுக்கு ஒற்றை தலைமை தான் வேண்டும் . அதிலும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமியின் தலைமையில் அதிமுக அடுத்த கட்டத்திற்கு செல்ல வேண்டும் என பேசினார். குமாரின் இந்த பேச்சுக்கு ஆதரவு தெரிவித்து பல நிர்வாகிகளும் சத்தம் போட இந்த நிகழ்வின் காரணமாக அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் வைத்தியலிங்கம் இறுதி வரை பேசவே இல்லை என கூறப்படுகிறது.