முதல்வர் திடீர் விசிட்... திருச்சி மாநகராட்சியில்அதிகாரிகள் ஆப்சென்ட்....

By செந்தில்வேல் – May 30, 2022

1120

Share E-Tamil Newsடெல்டா மாவட்டங்களில் நடைபெறும் தூர்வாரும் பணிகளை பார்வையிடுவதற்காக தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று விமானம் மூலம் திருச்சி வந்தார். விமான நிலையத்திலிருந்து உடல்நலம் குன்றியிருக்கும் திமுக நிர்வாகி திருச்சி செல்வேந்திரனை பார்க்க உறையூர் சென்ற தமிழக முதல்வர் ஸ்டாலின் 10 ;நிமிடத்திற்கு பிறகு ஒய்விற்காக  டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் உள்ள சர்க்கியூட் ஹவுசிற்கு கிளம்பினார்.  எம்ஜிஆர் சிலை கோர்ட் வழியாக முதல்வர் வாகனம் செய்ய போது இடது பக்கத்தில் இருந்த அலுவலகத்தை பார்த்த முதல்வர் ஸ்டாலின் இது என்ன அலுவலகம் என கேட்டிக்கொண்டிருந்த போதே முதல்வரின் வாகனம் திருச்சி மாநகராட்சி அலுவலகத்திற்கு வந்தது. உடனடியாக அலுவலகத்திற்குள் செல்லுமாறு முதல்வர் கூற மாநகராட்சி பரபரப்பானது. இன்று திங்கட்கிழமை என்பதால் மனுக்களை அளிக்க காத்திருந்த பொதுமக்களை பார்த்து இவர்கள் யார் எதற்காக வந்திருக்கிறார்கள் என முதல்வர்  கேட்டிருக்கிறார்.  மனு அளிக்க வந்திருப்பதாக அங்கிருந்தவர்கள் கூற அனைவரையும் மேலே வருமாறு கூறிவிட்டு முதல்வர் ஸ்டாலின் முதல் மாடியில் உ்ளள கமிஷனர்  அறைக்கு சென்றார். அந்த சமயத்தில் கமிஷனர் முஜிபுர் ரகுமான் உள்ளிட்ட அதிகாரிகள் அனைவரும் முதல்வரை வரவேற்க சர்க்கிூயட் ஹவுசில் இருந்னர். கமிஷனர் அறைக்கு  சென்ற முதல்வர் அதிகாரிகள் எங்கே என கேட்க அனைவரும் வெளியில் இருப்பதாக மற்றவர்கள் கூற உடனடியாக அனைவரையும் இங்கே வருமாறு முதல்வர் உத்தரவிட்ட தகவல் அனைத்து அதிகாரிகளும் தெரிவிக்கப்பட்ட அனைவரும் அவசரம் அவசரமாக திருச்சி மாநகர அலுவலகத்திற்கு ஓடி வந்தனர். முதலில் கமிஷனர் முஜிபுர் ரகுமானிடம் பட்ஜெட் விவாதம் என்றைக்கு என முதல்வர் கேட்க 6 ம் தேதி என பதில் அளித்துள்ளார். ஏன் இவ்வளவு தாமதமாக நடத்துகிறீர்கள். 2 நாட்களில் ஜூன் 2ம் தேதிக்குள் பட்ஜெட் விவாதத்தை நடத்தி முடிக்க வேண்டும் என முதல்வர் உத்தரவிட்டார். அடுத்ததாக இந்த பட்ஜெட்டில் தூர்வாரும் பணி, அடிப்படை வசதிகளுக்கு எவ்வளவு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என கேட்க 2 கோடி ரூபாய் என அதிகாரிகள் பதில் கூறியுள்ளனர். சுகாதார அதிகாரி யார் என முதல்வர் கேட்க நகர்நல அலுவலர் யாழினி முதல்வரின் முன்னாள் வந்து நிற்க மாநகராட்சியில் எத்தனை ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளன, எத்தனை டாக்டர்கள் என அடுக்கடுக்காக முதல்வர் கேள்வி மேல் கேள்வி கேட்க டாக்டர்கள்ள் மற்றும் பணியாளர்கள் பற்றாக்குறை அதிகமாக உள்ளதாக டாக்டர் யாழினி பதில் அளித்ததில் முதல்வர் ஸ்டாலின் திருப்தி அடையவில்லை என கூறப்படுகிறது. அடுத்தக்கட்டமாக நகரமைப்பு (Town Planing) அதிகாரி யார் என முதல்வர் கேட்க அதிகாரி சிவபாதம் இல்லை என பதில் கூறப்பட்டிருக்கிறது.  அந்த சமயத்தில் வௌியில் நிற்கும் அலுவலர்களை வரசொல்லி குறைகளை முதல்வர் கேட்டுள்ளார். அப்போது மாநகராட்சியில் பணியாற்றும் வனிதா என்ற பெண் ஊழியர் தனக்கு வெளிநபர்  தொந்தரவு கொடுப்பதாக 4 பக்க மனு அளிக்க  உரிய நடவடிக்கை எடுக்குமாறு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார். இப்படியாக பரபரப்பாக நிருபர்களிடம் மாநகராட்சி அதிகாரிகளிடம் ஆய்வு நடத்திய முதல்வர் ஸ்டாலின் அமைச்சர் நேரு ,மகேஷ் உடன் புறப்பட்டு சென்றார்.