அதிமுகவில் ராஜ்யசபா சீட்டு யாருக்கு? ... சம்பிரதாயத்திற்கு நிர்வாகிகள் கூட்டம் நடந்தது..

By senthil – May 20, 2022

4462

Share E-Tamil Newsதமிழகத்தில் காலியாக உள்ள 6 ராஜ்யசபா எம்பி பதவியிடங்களில் 4 இடங்கள் திமுகவிற்கும் 2 இடங்கள் அதிமுகவிற்கும் கிடைக்கும் என்கிற நிலை உள்ளது. திமுக 3 வேட்பாளர்களை அறிவித்துள்ளது. ஒரு இடத்தை காங்கிரசுக்கு ஒதுக்கியுள்ளது. அதிமுக 2 வேட்பாளர்களை இன்னும் அறிவிக்கவில்லை. முன்னாள் அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், சி.வி.சண்முகம், ஜெ.சி.டி.பிரபாகர், வளர்மதி, கோகுல இந்திரா ஆகியோர் தற்போது எம்எல்ஏக்களாக இல்லை. அதனால், எம்பி பதவி கேட்டு வருகின்றனர். ஏற்கனவே கொடுத்த வாக்குறுதியின்படி எப்படியும் செம்மலைக்கு சீட்டு வாங்கி கொடுத்து விடலாம் என இபிஎஸ் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. .இந்த நிலையில் வேட்பாளர்கள் யார் யார்? என்பது குறித்து ஆலோசிக்க நேற்றைய தினம் சென்னை ராயப்பேட்டை அதிமுக அலுவலகத்தில் ஓருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் தலைமையில் நிர்வாகிகள் கூட்டம் நடந்தது.  
இதில் துணை ஒருங்கிணைப்பாளர்கள் வைத்திலிங்கம், கே.பி.முனுசாமி மற்றும் அதிமுக வழிகாட்டி குழு உறுப்பினர்கள், ஆட்சி மன்ற குழுவினர், முன்னாள் அமைச்சர்கள் என 21 பேர் கூட்டத்துக்கு அழைக்கப்பட்டிருந்தனர். கூட்டத்தில் முதலில் பேசிய வழிகாட்டு குழு உறுப்பினருமான ஜெ.சி.டி.பிரபாகர் எழுந்து, எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் அவர்கள் முடிவு எடுத்தனர். இப்போது கருத்து கேட்கிறீர்கள். இங்கு வந்துள்ள 21 பேரில் பெரும்பாலானவர்கள் சீட்டு கேட்டுள்ளோம். எங்களிடம் கருத்துக் கேட்டால், எப்படி நன்றாக இருக்கும். இதனால் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் ஆகிய 4 பேர் மட்டுமே தனியாக பேசி முடிவு எடுத்து அறிவியுங்கள். உங்களை மீறி நாங்கள் எந்த நடவடிக்கையிலும் இறங்க மாட்டோம். உங்கள் முடிவை கட்சி ஏற்கத் தயார். உங்களை தலைவர்களாக நாங்கள் ஏற்றுக் ெகாண்டுள்ளோம். உங்கள் முடிவே இறுதியானது என்று கூறினார். தளவாய் சுந்தரம் மட்டும் எழுந்து, தென் மாவட்டம் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதால், இந்த முறை தென் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கு வழங்க வேண்டும் என்றார். முன்னாள் அமைச்சர் வளர்மதியோ, திமுகவில் வக்கீல்கள், படித்தவர்கள், பேசக்கூடியவர்களாக பார்த்து வழங்கியுள்ளனர். அதனால் அதிமுகவிலும் வக்கீல்களுக்கு வழங்க வேண்டும் என்றார்.எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் ஆகியோர் பூட்டிய அறையில் தனியாக பேசினர். பின்னர் 45 நிமிடத்துக்குப் பிறகு அவர்கள் வெளியில் வந்தனர். சில முடிவுகளை எடுத்துள்ளோம். விரைவில் மீண்டும் பேசுவோம் என்று கூறிவிட்டு கூட்டத்தை முடித்தனர். இன்று ்அல்லது நாளை இது தொடர்பாக அறிவிப்பு வெளியாகும் என்றும் வன்னியர் மற்றும் முக்குலத்தோர் ஆகிய சமுதாயங்களைச் சேர்ந்தவர்கள் வேட்பாளர்களாக அறிவிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன...