எங்களுக்கு மட்டும் ரத்தமா?னு திருச்சி போலீஸ் புலம்றாங்களாம்.. சுப்புனி காப்பிக்கடை பெஞ்ச்...

By செந்தில்வேல் – May 16, 2022

4464

Share E-Tamil Newsநன்றி... அரசியல் அடையாளம்...

அக்னி ஆரம்பிச்சதும் வெயில் வெளுத்துடும் போலனு பயந்துகிட்டே இருந்ததுக்கு பதிலா அடைமழை மாதிரி கிளைமெட் மாறிடுச்சல்ல சாமி‘ என ஸ்ரீரங்கம் பார்த்தசாரதியை பார்த்து கேட்டபடி பெஞ்சில் வந்து அமர்ந்தார் பொன்மலை சகாயம். ‘ ஆமா சகாயம் கிளைமெட் மாறியிருந்தாலும் அரசியல் ரொம்ப சூடாவே இருக்குது .. பாஜ குடச்சல் அதிகமாவதாக ஆளுங்கட்சியில பேச்சு ஆரம்பிச்சு இருக்கு’ என சந்துக்கடை காஜாபாய் எடுத்து கொடுக்க சுப்புனி காப்பிக்கடை பெஞ்ச் களை கட்ட ஆரம்பிச்சது. ‘ முருகன் மத்திய அமைச்சர் ஆனதும் அண்ணாமலைக்கு மாநில பொறுப்பு கொடுத்ததில் இருந்து திமுகவிற்கு டென்ஷன் தான். தினமும் ஒரு பேட்டி.. அதிலும் ஆளுங்கட்சியை அட்டாக் பண்ணி பேட்டி.. ஆளுங்கட்சி தரப்புல டென்ஷனா இருக்குறதா சொல்றாங்க’.. என பார்த்தசாரதி சொல்லி முடிக்க ‘ ஆமா சாமி, பட்டினபிரவேசம் பிரச்சனையில ஆளுங்கட்சி தரப்பு ஜகா வாங்குனதுல ஆளுங்கட்சிக்குள்ள சலசலப்பு இருந்துச்சாம். ஆனா இந்த விஷயத்துல சிஎம் தான்  பிரச்னைய பெருசாக்க வேணாம்னு சொல்லியிருக்கார். இந்தவிஷயத்துல ஆளுங்கட்சி வீம்பு பண்ணும்னு பாஜ தரப்பு எதிர்ப்பார்த்தாங்க...ஆனா விஷயம் பொசுக்குனு முடிஞ்சதுல அவங்களுக்கு ஏமாத்தம் தான்னு சொல்லிகிட்டாலும் பாஜவின் அணுகுமுறை திமுகவிற்கு ரொம்ப கோபத்த கொடுத்து இருக்காம்‘ என சந்துக்கடை காஜாபாய் சொல்லி முடிக்க ‘ அடபோ பாய் திருவாரூ்ர் தெற்கு வீதிக்கு  கலைஞர் பெயர் வைக்கணும்னு நகராட்சியில கொண்டு வந்த தீர்மானத்தை எதிர்த்து போராட்டம் நடத்துவோம்னு பாஜ சொல்லுச்சு.. உடனே அமைச்சர் நேரு திருவாரூர் நகராட்சி தீர்மானத்த முதல்வர் நிறுத்தி வைக்க சொல்லிட்டார்னு அறிவிச்சுட்டார்..’ என பொன்மலை சகாயம், ‘ அப்ப என்ன பாஜவை பாத்து ஆளுங்கட்சி பயப்படுதுனு சொல்றியா?’ என ஸ்ரீரங்கம் பார்த்தா கேட்க.. பெஞ்சில் இருந்தவர்கள் சிரித்தார்கள். 
‘ சரி சகாயம் அரசியல விடு, போலீஸ் மேட்டர் எதுமே இல்லையா?’ என சந்துக்கடை காஜாபாய் கேட்டதும் தாமதம் ‘ திருச்சி சிட்டியில எஸ்எஸ்ஐ புரமோஷன் லிஸ்ட் வெளியிட்டாங்க. இதுல சின்ன சின்ன பனிஷ்மெண்ட் வச்சு இருக்குற 20 பேருக்கு பிரமோஷன் தரல.. அதே சமயம் இன்ஸ்பெக்டர்லேந்து டிஎஸ்பி புரமோஷன் லிஸ்ட் வந்துச்சு. அதுல கோட்டை க்ரைம் இன்ஸ்பெக்டரா இருந்த நீலம் இன்ஸ்பெக்டருக்கு விஜிலன்ஸ் கேஸ் இருக்கு. ஆனா பாருங்க அவருக்கு பிரமோஷன் கொடுத்து அனுப்பிட்டாங்கனு.. எஸ்எஸ்ஐங்க ரொம்ப வருத்தப்படுறாங்க..’அதே மாதிரி டிசி பிரமோஷன் கொடுத்தும் பலன் இல்லைனு ஏசி வேலை பார்க்கும் திருச்சி மாநகராட்சி அதிகாரி புலம்பல் இன்னும் நிக்கல பாவம்‘  என பொன்மலை சகாயம் பேசிமுடிக்க... ‘ மழை வர்ற மாதிரி இருக்கு .கிளம்பலாம் பா ’ என ஸ்ரீரங்கம் பார்த்தசாரதி சொல்ல.. சுப்புனி காப்பி கடை பெஞ்ச் காலியானது....