தென்ஆப்பிரிக்கா முதல் டெஸ்ட் கிரிக்கெட்... - இந்தியா நிதான ஆட்டம்

By senthil – December 28, 2021

4458

Share E-Tamil Newsதென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இதன்படி இந்தியா - தென்ஆப்பிரிக்கா இடையிலான முதலாவது டெஸ்ட் செஞ்சூரியனில் உள்ள சூப்பர் ஸ்போர்ட் பார்க் மைதானத்தில்  தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் விராட் கோலி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக மயங்க் அகர்வாலும், லோகேஷ் ராகுலும் களமிறங்கினர். இருவரும் தென் ஆப்பிரிக்க அணியின் பந்துவீச்சை சிறப்பாக எதிர்கொண்டு நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.  இந்திய உணவு இடைவேளை வரை 28 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 83 ரன்கள் எடுத்துள்ளது. மயங்க் அகர்வால் 46 ரன்னிலும், லோகேஷ் ராகுல் 29 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.