திருச்சி ஏர்போட்டில் மாஸ்க்கில் மறைக்கப்பட்ட 5 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்...

By செந்தில்வேல் – November 25, 2022

64

Share E-Tamil Newsஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் மூலம் துபாயிலிருந்து கொழும்பு வழியாக திருச்சி விமான நிலையத்திற்கு வந்த ஒரு ஆண் பயணியிடம் சுங்கத்துறை அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் சோதனை செய்தனர். அப்போது ரூ .2,55,984/- மதிப்புள்ள 48.000 கிராம் எடையுள்ள 24 கேரட்தங்கத்தின் ஒரு துண்டு பறிமுதல் செய்யப்பட்டது. மேலும்(49.000 கிராம்) ஜீன்ஸ் பேண்டிலிருந்து பிரித்தெடுக்கப்பட்டது. 24 கேரட் தூய்மை கொண்ட ஒரு மெல்லிய தங்கக் கம்பி 11.000 கிராம் பறிமுதல்செய்யப்பட்டது. அதன் மதிப்பு ரூ.58,6663 /- ஆகும். மேலும் மாஸ்கில் மறைக்கப்பட்ட மொத்த எடை 59.000 கிராம் மதிப்பு ரூ. 3,14,647/- மற்றும் 02 ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் (256 ஜிபி) மதிப்பு ரூ.2,50,000/- மொத்தமாக ரூ. 5,64,647/மதிப்புள்ள தங்க துண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.