திருச்சி ஏர்போர்ட்டில் உள்ளாடையில் மறைத்து 11.5 லட்சம் தங்கம் கடத்தல்.... 2 பெண்களிடம் விசாரணை..

By செந்தில்வேல் – November 25, 2022

80

Share E-Tamil Newsஇலங்கை கொழும்புவில் இருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் திருச்சி விமான நிலையத்தை வந்தடைந்தது. அந்த விமான  பயணிகள் மற்றும் அவரது  உடமைகளை வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறையினர் சோதனையிட்ட பின்னர் வௌியேற அனுமதித்து வந்தனர். அப்போது இலங்கையை சேர்ந்த இரண்டு பெண்களை சோதனையிட்ட போது... உடலில் தங்கம் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக ஸ்கேனர் மிஷின் அலறியுள்ளது. இதனை தொடர்ந்து அவர்கள் இருவரும் ரகசிய இடத்திற்கு அழைத்து செல்லப்பட்டு பெண் சுங்கத்துறையினர் அவர்களை முழுமையாக சோதனையிட்டு உள்ளனர். அப்போது அவர்கள் தங்களின் உள்ளாடைகளில் பேஸ்ட் வடிவில் தங்கத்தை மறைத்து கடத்தி வருவது தொிய வந்தது. உள்ளாடையை கைப்பற்றிய சுங்கத்துறையினர் அதில் இணைத்து வைக்கப்பட்டிருந்த பேஸ்ட் தங்கத்தை பிரித்தெடுத்தனர். அப்போது அது 8.63 லட்சம் மதிப்பிலான 162  கிராம் தங்கம் என்று தொிய வந்தது. மேலும் அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இரண்டு பெண்களும் அணிந்து வந்த 60  கிராம் எடை கொண்ட இரண்டு தங்க சங்கிலிக்கும் உரிய வகையில் வரி செலுத்தவில்லை என்பதும் தொிய வந்தது. இதனை தொடர்ந்து 2.96 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க சங்கிலியும் பறிமுதல் செய்யப்பட்டது.  மொத்தம் 11.59 லட்சம் மதிப்பிலான 162 கிராம் தங்கம் அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.