முன்னாள் எம்.பி, கே.சி.பி. மனைவி காலமானார்....

By செந்தில்வேல் – November 25, 2022

210

Share E-Tamil Newsகரூர் நாடாளுமன்ற தொகுதி முன்னாள் உறுப்பினர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், திமுக உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினர், சொத்து பாதுகாப்பு குழு செயலாளர் கே.சி.பி. மனைவியும், தொழிலதிபர் சிவராமனின் தாயாருமான அன்னம்மாள் உடல் நலக்குறைவால் இன்று அதிகாலை காலமானார். நாளை 26 ஆம் தேதி காலை 10 மணிக்கு அவரது இல்லத்தில் இறுதி சடங்குகள் நடைபெறுகிறது. திமுக நிர்வாகிகள் தொழிலதிபர்கள், அனைத்து கட்சியினர் அவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

கே.சி‌பி. நாடாளுமன்றத் தேர்தல்களில் போட்டியிட்டபோது நாற்பதாயிரத்திற்கும் மேற்பட்ட கிராமங்களில் சென்று வாக்கு சேகரிப்பார். எம்.பிஆனதும் மீண்டும் கிராமங்களுக்கு சென்று நன்றி தெரிவிப்பார். அப்போது அவருக்கு உணவு சமைத்து அன்னம்மாள் அனுப்பி வைப்பார்கள் ‌. மேலும் இனிப்பு உள்ளிட்ட தின்பண்டங்கள் வகைகளையும் தனது மேற்பார்வையிலேயே தயாரித்து வாக்கு சேகரிக்கும் இடங்களுக்கு வேளாவேளைக்கு அனுப்பி விடுவார். அவருடன் பிரச்சாரத்திற்கு சென்றபோது எப்போது உணவு வரும் என்று ஆவலோடு காத்திருப்போம். பெயருக்கேற்றபடி அன்னபூரணியாக திகழ்ந்தவர் அவர் என என திமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் நினைவு கூர்ந்தனர்.