அரியலூரில் பாஜக நகர தலைவர் மீது வழக்கு பதிவு.... டிரைவர் கைது...

By செந்தில்வேல் – November 25, 2022

232

Share E-Tamil Newsஅரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனை அருகே ரெட்டியார் காலனி தெருவை சேர்ந்த வசந்தகுமாரி. இவருக்கு சொந்தமான சுற்றுச்சுவரை பாஜக நகர தலைவர் ராமர் அனுமதி இன்றி அத்துமீறி நுழைந்து ஜேசிபி இயந்திரம் மூலம் இடித்து சேதப்படுத்தி உள்ளார். இதுகுறித்து வசந்த குமாரி ஜெயங்கொண்டம் காவல்

நிலையத்தில் புகார் அளித்தார்.  புகாரின் பேரில் ஜெயங்கொண்டம் காவல்துறையினர் ஜேசிபி மிஷினையும் பறிமுதல் செய்து டிரைவர் ராம்குமாரை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள ராமர் மீது வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு தேடி வருகின்றனர்.