திருச்சியில் லாரியை திருடி சென்ற மர்ப நபரை தேடி வரும் போலீசார்.....

By செந்தில்வேல் – November 25, 2022

54

Share E-Tamil Newsதிருச்சி ஓஎப்டி காவேரி நகரை சேர்ந்தவர் கிருபை நாயகம்(25). இவர்  டிரைலர் எஸ்டி மகிமை என்ற பெயரில் துவாக்குடி பகுதியில் லாரி சர்வீஸ் நடத்தி வருகிறார். லாரியை துவாக்குடி எஸ்எஸ் ஆக்சிஜன் கம்பெனி அருகே நிறுத்தி விட்டு அவர் வீட்டுக்கு சென்றுள்ளார் திரும்பி வந்து பார்த்த போது லாரியை காணவில்லை. இது குறித்து அவர் துவாக்குடி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.