திருச்சி: பீரோவில் இருந்து 6.5 சவரன் நகை, பணம் மாயம்... போலீஸ் விசாரணை

By செந்தில்வேல் – November 25, 2022

66

Share E-Tamil Newsதிருச்சி மண்ணச்சநல்லுார் மான்பிடிமங்களம் பகுதியை சேர்ந்தவர் அச்சுதாமேனன்(52). இவர் நுகர்வோர் கோர்ட்டில் அலுவலக உதவியாளராக பணியாற்றி வருகிறார். தனது வீட்டின் பீரோவில் 6.5 சவரன் நகை, மற்றும் பணம் வைத்திருந்தார். பணி முடிந்து அவர் திரும்பி வந்து பீரோவை திறந்து பார்த்த போது நகை பணம் மாயமாகி இருந்தது. வீடு முழுக்க தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து மண்ணச்சநல்லுார் காவல் நிலையத்தில் அவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.