போலீஸ் தேர்வு எழுத வரும் 9500 பேர்களுக்காக சிறப்பு பேருந்து இயக்கப்படும்.... - திருச்சி எஸ்பி அறிவிப்பு

By செந்தில்வேல் – November 25, 2022

106

Share E-Tamil Newsதமிழக காவல்துறையில் இரண்டாம் நிலை காவலர், சிறைக்காவலர்(ஆண்,பெண்) மற்றும் தீயணைப்பு துறையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான ஒருங்கிணைந்த எழுத்து தேர்வு வரும் 27ம் தேதி(ஞாயிறு) நடைபெற உள்ளது. தமிழகம் முழுவதும் 3552 காலி பணியிடங்களுக்கான இந்த தேர்வில் ஏராளமானவர்கள் கலந்து கொள்ள விண்ணப்பித்து உள்ளனர். திருச்சி மாவட்டத்தை பொறுத்தவரை 9500 பேர் தேர்வெழுத உள்ளனர். 
1. கே.ராமகிருஷ்ணன் பொறியியல் கல்லுாரி, சமயபுரம்
2. கே.ராமகிருஷ்ணன் பொறியியல் & டெக்னாலஜி கல்லுாரி, சமயபுரம்
3. எம்ஏஎம் பொறியியல் கல்லுாரி, சிறுகனுார்
4. எம்ஏஎம் ஸ்கூல் ஆப் இன்ஜினியரிங், சிறுகனுார்
5. எஏஎம் காலேஜ் ஆப் என்ஜினியரிங், சிறுகனுார்
6. எஸ்ஆர்எம் இன்ஜினியரிங் கல்லுாரி, இருங்களூர்
7. எஸ்ஆர்எம் கலை அறிவியல் கல்லுாரி, சமயபுரம்

ஆகிய 7 மையங்களில் தேர்வு நடைபெற உள்ளது. 
இது குறித்து திருச்சி மாவட்ட எஸ்பி சுஜித்குமார் வௌியிட்டுள்ள அறிவிப்பில்.... தேர்வெழுத வருபவர்கள் ஹால் டிக்கெட், அடையாள அட்டை, நீல நிறம் அல்லது கருப்பு பால் பாயிண்ட் பேனா, எழுத்து எதுவும் இல்லாத பரீட்சை அட்டை கொண்டு வர வேண்டும். செல்போன், ஸ்மாட் வாட்ச், ப்ளூ டூத், ஹெட்போன், பென் டிரைவ், கால்குலேட்டர், பென்சில், ரப்பர் மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை கொண்டு வரக்கூடாது. சரியாக 8 மணி முதல் தேர்வு மையத்திற்குள் செல்ல அனுமதி அளிக்கப்படும். மத்திய பேருந்து நிலையம், சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து சிறப்பு பேருந்துகள் காலை 7 மணி முதல் இயக்கப்படும். ஹால் டிக்கெட் இல்லாதவர்கள் கண்டிப்பாக அனுமதிக்கப்பட மாட்டார்கள். ஹால் டிக்கெட்டில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் மாவட்ட காவல்துறை அலுவலகத்திற்கு உடனே தொடர்பு கொள்ளலாம். தொடர்பு கொள்ள வேண்டிய செல்போன் நம்பர்கள்..... அலுவலக கண்காணிப்பாளர் எஸ்.பிரபாகர் 94981 19340, மாவட்ட தனிப்பிரிவு அலுவலகம் - 94981 00645 என்று அவர் தொிவித்துள்ளார்.