கரூரில் தொழிலாளியிடம் செல்போன் பறிக்க முயற்சி.... ஒருவர் எஸ்கேப்... ஒருவருக்கு தர்ம அடி....

By செந்தில்வேல் – November 25, 2022

34

Share E-Tamil Newsகரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட சின்னஆண்டாங்கோவில் சாலையில் அமைந்துள்ள பாரி நகர் அருகே வட மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் நடந்து சென்றுக்கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக டூவீலரில் வந்த இரண்டு இளைஞர்கள் வட மாநில தொழிலாளியிடமிருந்து செல்போனை பறித்து கொண்டு தப்பி ஓட முயன்றுள்ளனர். 

அப்போது இருசக்கர வாகனத்தை பிடித்து இழுக்கும்போது கொள்ளையர்கள் தடுமாறி கீழே விழுந்துள்ளனர். கீழே விழுந்த இரண்டு பேரும் வட மாநிலத்தவரை சரமாரியாக தாக்கியுள்ளனர். அப்போது அருகில் இருந்தவர்கள் சத்தம் கேட்டு, ஒருவரை பிடித்துக்கொள்ள மற்றொரு நபர் தப்பி ஓடி விட்டார். ஒருவரை பிடித்து அப்பகுதி பொதுமக்கள் ஒன்று சேர்ந்து தர்ம அடி கொடுத்தனர்.

மேலும், தகவலின் பேரில் விரைந்து வந்த போலீசார் கொள்ளையனை நகர காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வடமாநிலத்தைச் சேர்ந்த இளைஞருக்கு காயம் ஏற்பட்டதால் அவரை தனியார் ஆம்புலன்ஸ் மூலம் முதலுதவி சிகிச்சைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இரவு நேரத்தில் மாநகரப் பகுதியில் நடைபெற்ற வழிப்பறி சம்பவத்தின் காரணமாக அப்பகுதி சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.