மாநில விளையாட்டு போட்டி.... மயிலாடுதுறையில் ரயிலில் புறப்பட்ட 129 மாணவ-மாணவிகள்....

By செந்தில்வேல் – November 25, 2022

40

Share E-Tamil Newsமயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள மயிலாடுதுறை, சீர்காழி, தரங்கம்பாடி மற்றும் குத்தாலம் தாலுகாக்களை சேர்ந்த அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு குறுவட்ட போட்டிகள் நடத்தப்பட்டு, அதில் தேர்வான மாணவர்கள் கடந்த வாரம் மயிலாடுதுறை மற்றும் பொறையாரில் நடைபெற்ற மாவட்ட அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டனர். இதில் 66 மாணவர்கள், 63 மாணவிகள் என மொத்தம் 129 பேர் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனர். இதையடுத்து மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க தகுதி பெற்ற மாணவிகள் திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெறும் மாநில விளையாட்டுப் போட்டியில் கலந்து கொள்வதற்காக   மயிலாடுதுறை ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டனர். அவர்களை மயிலாடுதுறை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரேணுகா மற்றும் உடற்கல்வி இயக்குனர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் ஆகியோர் வாழ்த்தி வழியனுப்பி வைத்தனர்.