திருச்சியில் பிடிப்பட்ட 12அடி நீளமுள்ள மலைப்பாம்பு....

By செந்தில்வேல் – November 25, 2022

90

Share E-Tamil Newsதிருச்சி, துவரங்குறிச்சியில் இருந்து அய்யனார் கோவில்பட்டி. செல்லும் சாலையின் ஓரத்தில் பாம்பு ஒன்று ஊர்ந்து சென்றது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்ப குதி மக்கள், உடனடியாக இது குறித்து துவரங்குறிச்சி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் தீயணைப்புத்துறை வீரர்கள் அங்கு சென்று பார்த்தபோது, அது சுமார் 12 அடிநீளமுள்ள மலைப்பாம்பு என்பது தெரியவந்தது.

இதை யடுத்து அந்த பாம்பை லாவக மாக பிடித்து துவரங்குறிச்சி வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். பின்னர் அந்த மலைப்பாம்பு வனப்பகுதி யில் விடப்பட்டது.