தஞ்சையில் சாலை தடுப்பில் மோதி வேன் விபத்து.... 9 பேர் படுகாயம்...

By செந்தில்வேல் – November 25, 2022

12

Share E-Tamil Newsதஞ்சையை அடுத்த இனாத்துக்கன் பட்டியை சேர்ந்தவர் வேலு. இவருடைய மனைவி அஞ்சம்மாள். இவர் அதே பகுதியை சேர்ந்த எட்டு பேருடன் புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையில் ஒரு துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வேனில் சென்றார் .வேனை தோழகிரிபட்டியை சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் ஓட்டினார் . துக்க நிகழ்ச்சியை முடித்துவிட்டு அவர்கள் அங்கிருந்து வேனில் திரும்பி வந்து கொண்டிருந்தனர். தஞ்சை அருகே புனல்குளம் நெல் சேமிப்பு கிடங்கு அருகே வந்த போது வேனின் முன்பக்க டயர் வெடித்தது . இதனால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து வேன் தாறுமாறாக சாலையில் ஓடிய.து இதில் சாலையின் நடுவே இருந்த இரும்பு தடுப்பில் மோதியது. இந்த விபத்தில் அஞ்சம்மாள் உட்பட9  பேர் காயமடைந்தனர் காயம் அடைந்தவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர் . இது குறித்து தகவல் அறிந்த தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக போலீஸ் சப் இன்ஸ்பெக்டர்  அபிராமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர் .மேலும் இதுகுறித்து அஞ்சம்மாள் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.