அரசு பஸ் கண்டக்டர் வீட்டில் வௌ்ளிப்பொருட்கள் திருட்டு.... டூவீலருடன் மர்ம நபர்கள் மாயம்....

By செந்தில்வேல் – November 25, 2022

46

Share E-Tamil Newsதஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலையில் உள்ள சீதா நகரை சேர்ந்தவர் யுவராஜ். (65 ) ஓய்வு பெற்ற அரசு பஸ் கண்டக்டர் இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது மகளை பார்ப்பதற்காக சென்னை சென்றார். பின்னர் சென்னையில் இருந்து  வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார் உள்ளே சென்று பார்த்த போது அறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த துணிமணிகள் சிதறி கிடந்தன மேலும் பீரோவில் இருந்த வெள்ளி பொருட்கள் திருட்டுப் போய் இருந்தது தெரிய வந்தது. மேலும் வீட்டின் முன் நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிளையும் காணவில்லை வீட்டில் ஆட்கள் இல்லாததை அறிந்த மர்ம நபர்கள் 600 கிராம் வெள்ளி பொருட்கள் மற்றும் மோட்டார் சைக்கிளை திருடி சென்றது தெரிய வந்தது இது குறித்து யுவராஜ் தஞ்சை தமிழ் பல்கலைக்கழக போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார் அதன் பெயரில் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் அபிராமி மற்றும் போலீசார் சம்பவம் இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர் இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து வெள்ளி பொருட்கள் மற்றும் மோட்டார் சைக்கிளை திருடி சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.