அரசு ஊழியர்கள் திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம்....

By செந்தில்வேல் – November 25, 2022

74

Share E-Tamil Newsமத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கும் அதே கால இடை வெளியில் தமிழக அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படி வழங்கக்கோரியும், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத் தக்கோரியும் அரசு ஊழியர்கள் திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்துக்குமாவட்டதலைவர் வளன் அரசு தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் கென்னடி கோரிக்கை களை விளக்கி பேசினார். மாநில துணைத்தலைவர் லட்சும. ணன் சிறப்புரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் திரளான அரசு ஊழியர்கள் கருப்பு ஆடை அணிந்து கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள். முன்னதாக கருப்பு ஆடை அணிந்து அவர்கள் தங்கள் அலு வலகங்களில் பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.