திருப்பதி கோவிலில் அங்கப்பிரதட்சண டோக்கன் இன்று வெளியீடு...

By செந்தில்வேல் – November 25, 2022

254

Share E-Tamil News



திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தேவஸ்தானம் சார்பில் ரூ.300 தரிசன கட்டண டிக்கெட்டுகள் மாதந்தோறும் ஆன்லைனில் வெளியிடப்படுகிறது. அதன்படி திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க அங்கப்பிரதட்சண டோக்கன் இன்று ஆன்லைனில் வெளியிடப்படுகிறது. திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- திருப்பதி ஏழுமலையானை டிசம்பர் மாதத்தில் தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அங்கப்பிரதட்சண டோக்கன் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10 மணியளவில் திருமலை-திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்படுகிறது. இதை, பக்தர்கள் கவனத்தில் கொண்டு ஆன்லைனில் அங்கப்பிரதட்சண டோக்கன் முன்பதிவு செய்து, குறிப்பிட்ட நாளில் திருமலைக்கு வந்து ஏழுமலையானை தரிசனம் செய்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.