ரயிலில் இருந்து தள்ளிவிடப்பட்ட ராணுவ வீரர் மரணம்.... டிடிஆருக்கு வலை வீச்சு

By செந்தில்வேல் – November 24, 2022

264

Share E-Tamil Newsஉத்தரப் பிரதேசத்தில் ரெயிலில் இருந்து டிக்கெட் பரிசோதகரால் தள்ளிவிடப்பட்ட ராணுவ வீரர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். உத்தரப் பிரதேசம் மாநிலம் பாலில் மாவட்டத்தை சேர்ந்த ராணுவ வீரர் சோனு சிங். இவர்திப்ரூகரில் இருந்து புதுடெல்லி வரை செல்லும் ராஜ்தானி எக்ஸ்பிரஸில் பயணம் மேற்கொண்டார். பரேலி ரெயில் நிலையத்தில் இறங்கிவிட்டு, ரெயில் புறப்படும் போது ஏற முயன்றார். அப்போது, டிக்கெட் பரிசோதகர் போர் என்பவர் சோனு சிங்கை கீழே தள்ளிவிட்டுள்ளார். இதனால், ரயிலுக்கு அடியில் சிக்கி படுகாயமடைந்த சோனுசிங்கிற்கு, கால்கள் அகற்றப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி சோனு சிங் உயிரிழந்தார். இது தொடர்பாக, வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், 4 தனிப்படைகள் அமைத்து தலைமறைவாகியுள்ள டிக்கெட் பரிசோதகரை தேடி வருகின்றனர்.