எம்.ஆர்.ராதா பாணியில் பீட்டா அமைப்பை நோக்கி கேள்வி எழுப்பிய நீதிபதிகள்.....

By செந்தில்வேல் – November 24, 2022

248

Share E-Tamil Newsரத்தக்கண்ணீர் படத்தில் குஷ்ட நோய்க்கு ஆளான எம்.ஆர்.ராதா, சாப்பாடு போட அழைத்து வந்த எஸ்எஸ்ஆரிடம்.... சோறு போடுறதும் போடுற கறி சோறா போடுங்கய்யா என்று கேட்பார்.... அதற்கு அவர்.... நாங்க ஜீவகாருண்ய கட்சியை சேர்ந்தவர்கள். உயிர்களை கொல்ல மாட்டோம் என்பார்... அதற்கு எம்ஆர் ராதா.... அய்.... சோறு திங்கறதுக்கெல்லாம் கட்சி வச்சுருக்கானுங்கய்யா.... உயிரெல்லாம் கொல்ல மாட்டீங்களா..... அப்ப மூட்ட பூச்சு கடிச்சா என்னடாப்பா பண்ணுவீங்க என்று நக்கல் அடிப்பார். இதே பாணியில் பீட்டா அமைப்பை நோக்கி நீதிபதிகள் கேள்வி எழுப்பி உள்ளனர்.  ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளிக்கும் தமிழக அரசின் அவசர சட்டத்தை எதிர்த்து பீட்டா உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளன. இந்த மனுக்கள் இன்று உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வில்  விசாரணைக்கு வந்தது. பீட்டா தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சித்தார்த் லூத்ரா வாதாடும்போது.... ஜல்லிக்கட்டை அனுமதிக்கும் அவசர சட்டம் ஒருதலைப்பட்சமானது, கர்நாடகா, மகாராஷ்டிரா, தமிழகத்தில் இயற்றப்பட்ட அவரச சட்டங்கள் விலங்குவதையை தடுக்கவில்லை என்றும் வாதிட்டார். அப்போது நீதிபதிகள் அவரை நோக்கி...... கொசு போன்ற பூச்சியினங்கள் உங்களை கடிக்கும் போது, அதை அடித்து கொன்றால், விலங்கு வதை தடுப்பு சட்டத்தின் கீழ் வருமா? என கேட்டனர். ஜூடோ போன்ற விளையாட்டுகளில் மனிதர்கள் இறப்பது குறித்து என்ன கூறுவீர்கள்? என்றும் கேட்டனர். இதற்கு பதிலளித்த மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், ஜூடோ போன்ற விளையாட்டுகளில் காயங்கள் ஏற்படும் என தெரிந்துதான் பங்கேற்கிறோம் என்றார். விளையாட்டில் பங்கேற்பதா? வேண்டாமா? என்பது தேர்வைப் பொருத்து அமைவதாகவும் அவர் கூறினார். விலங்குகளுக்கு அதுபோன்று தேர்வு இல்லாமல் போகும்போது அவற்றுக்கு தன்னுரிமை உள்ளதா? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். ஜல்லிக்கட்டில் 11 லட்சம் காளைகள் பங்கேற்றன. சில புகைப்படங்களை கொண்டு எந்தவித முன்முடிவுக்கும் வரக்கூடாது என தமிழக அரசு தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் பதிவு செய்த நீதிபதிகள், வழக்கின் விசாரணையை வரும் 29ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.