திருச்சியில் 27 ஆயிரம் கிலோ பதுக்கல் உர மூட்டைகள் பறிமுதல்....

By செந்தில்வேல் – November 24, 2022

104

Share E-Tamil Newsதிருச்சி துவரங்குறிச்சியில் உள்ள கனி பெர்டிலைசர்ஸ் சில்லரை உர விற்பனை கடையில், வேளாண்மை இணை இயக்குனர் தலைமையில் திடீர் ஆய்வு நடைபெற்றது. இந்த ஆய்வின் போது அனுமதி பெறாத இடத்தில் கணக்கில் காட்டப்படாத 27 ஆயிரத்து 375 கிலோ உர மூட்டைகள் வைக்கப்பட்டு இருந்தது தொிய வந்தது. இதனை தொடர்ந்து அங்குள்ள கணக்கில் வராத அனைத்து உர மூட்டைகளும் கைப்பற்றப்பட்டு துவரங்குறிச்சி ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு எடுத்து செல்லப்பட்டது. மேலும் அந்த உர விற்பனை கடைக்கு 21 நாட்களுக்கு விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டது. இதன் காரணமாக அந்த உர கிடங்கிற்கு சீல்  வைக்கப்பட்டது.