சீனாவில் மீண்டும் விஸ்வரூபமெடுக்கும் கொரோனா.... பல இடங்களில் ஊரடங்கு

By செந்தில்வேல் – November 24, 2022

164

Share E-Tamil Newsசீனாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 31,454 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது என்று அந்நாட்டின் தேசிய சுகாதார வாரியம் தெரிவித்து உள்ளது.  இந்த பாதிப்புகளால், அந்த நாட்டில் பெரிய அளவில் ஊரடங்குகளை விதிக்கவும், அதிக எண்ணிக்கையில் பரிசோதனைகளை நடத்தவும், பயண கட்டுப்பாடுகளையும் விதிக்கவும் அரசு ஆலோசனை செய்து வருகிறது. கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை எட்டியதால் மக்கள் வீட்டிலேயே இருக்குமாறு அதிகாரிகள் வலியுறுத்தி வருகின்றனர். பீஜிங்கில் மால்கள் மற்றும் பூங்காக்கள் மூடப்பட்டன மற்றும் பரபரப்பான பகுதிகள் ஆடகள் நடமாட்டம் இல்லாமல் உள்ளன. முக்கிய உற்பத்தி மையங்களான சோங்கிங் மற்றும் குவாங்சோ நகரங்களில் தொடர்ந்து அதிக கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன.  ஹைஜு மாவட்டத்தின் முக்கிய பகுதிகளில் நோய்த்தொற்றுகள் தொடர்ந்து அதிகரித்து வருவதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். ஐபோன் தொழிற்சாலையின் தாயகமான செங்ஷோ, உள்ளிட்ட பல மாவட்டங்களுக்கு ஊரடங்கிற்கு உத்தரவிட்டுள்ளது.