புல்லட் ப்ரூப் காருக்கு நோ..... ஆட்டோவில் பணிக்கு செல்லும் அமெரிக்க பெண் துாதர்கள்...

By செந்தில்வேல் – November 24, 2022

88

Share E-Tamil Newsஇந்தியாவில் பல்வேறு நாடுகளை சேர்ந்த தூதரகங்கள் உள்ளன.  இவற்றில் ஒன்றாக தலைநகர் டெல்லியில் அமெரிக்க துாதரகம் உள்ளது. இந்த துாதரகத்தில் ஆன் எல் மேசன், ரூத் ஹோம்பெர்க், ஷரீன் ஜே கிட்டர்மேன், ஜெனிபர் பைவாட்டர்ஸ் ஆகிய 4 பெண் துாதர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கென பிரத்யேக புல்லட் புரூப் கார்கள் உள்ளது. 4 பெண் துாதர்களும் இந்த கார்களில் பெரும்பாலும் பயணிப்பதே இல்லை. காரணம் அவர்களை கவர்ந்தது இந்திய ஆட்டோக்கள் தான். ஆட்டோ ரிக்‌ஷாவில் பயணம் செய்வதிலேயே அவர்கள் விருப்பம் கொண்டுள்ளனர். இதற்காக தனியாக ஆட்டோவையும் வாங்கி வைத்துள்ளனர்.  இதுதவிர, பணி

நிமித்தம் எங்கேனும் செல்ல வேண்டுமென்றாலும் அவர்கள் கருப்பு மற்றும் பிங்க் வண்ணம் கொண்ட ஆட்டோவிலேயே பயணம் மேற்கொள்கின்றனர். அவர்களே ஆட்டோவை ஓட்டியும் செல்கின்றனர். வெளியே போகும்போது, சுதந்திரம் ஆக பயணிக்கும் உணர்வை ஏற்படுத்துகிறது என கூறுகின்றனர். இது குறித்து ரூத் கூறும்போது, தூதர் என்றால் உயரிய பதவி என்றெல்லாம் கிடையாது. தூதர் என்பது மக்களை மக்கள் சந்திப்பது. மக்கள் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்வது. ஓர் உறவை கட்டமைத்து கொள்ளும் வாய்ப்பு பெறுவது. அதனையே ஆட்டோவை வைத்து நான் செய்து கொண்டிருக்கிறேன் என்று கூறியுள்ளார்.