கூடைப்பந்து போட்டியில் திருச்சி ராமகிருஷ்ணன் பொறியியல் கல்லுாரி அசத்தல்...

By செந்தில்வேல் – November 24, 2022

72

Share E-Tamil Newsசென்னை, அண்ணா பல்கலைக்கழக விளையாட்டு கழகம் சார்பில் 14 வது மண்டலத்திற்குட்பட்ட கல்லூரிகளுக்கு இடையிலான மாணவர்களுக்கான பேட்மிண்டன், ஹாக்கி போட்டிகள் அரியலூர், பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியிலும், கூடைப்பந்து போட்டி 
கே. ராமகிருஷ்ணன் பொறியியல் கல்லூரியிலும்  (கே.ஆர்.சி.இ.) கால்பந்து போட்டி எம்.ஏ.எம். பொறியியல் மற்றும் தொழில் நுட்ப கல்லூரியிலும் நடைபெற்றது. 11 கல்லூரி அணிகள் பங்கு பெற்ற பேட்மிண்டன் போட்டியில் கே. ராமகிருஷ்ணன் பொறியியல், 12 கல்லூரி அணிகள் பங்கேற்ற கால்பந்து போட்டியில் தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் மற்றும் 3 கல்லூரி அணிகள் பங்கேற்ற லீக் முறையில் நடைபெற்ற ஹாக்கி மற்றும் 7 கல்லூரி அணிகள் பங்கு பெற்ற கூடைப்பந்து போட்டிகளில் கே. ராமகிருஷ்ணன் தொழில் நுட்ப கல்லூரி (கே.ஆர். சி.டி.) அணிகள் முதலிடம் பிடித்தது மண்டலங்களுக்கு இடையிலான போட்டியில் விளையாட தகுதி பெற்றது.