நடிகர் கமல் நலமுடன் இருக்கிறார்..... ஓரிரு நாளில் வீடு திரும்புவார்,,,, ஆஸ்பத்திரி நிர்வாகம்

By செந்தில்வேல் – November 24, 2022

66

Share E-Tamil Newsநடிகர் கமலஹாசன் காய்ச்சல் காரணமாக நேற்று  மாலை சென்னையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் பரிசோதனை நடத்தினர். சாதாரண காய்ச்சல் தான் என கூறியதால் அவர்  இன்று காலை  டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார் என செய்திகள் வெளியானது. அதே நேரத்தில் தொடர்ந்து அவர் ஓய்வில் இருக்க வேண்டியது  இருப்பதால் இன்னும் ஓரிரு நாள் ஆஸ்பத்திரியிலேயே இருக்க வேண்டிய  சூழல் ஏற்பட்டதால் அவர் தொடர்ந்து அந்த ஆஸ்பத்திரியில் இருக்கிறார். அவர் நலமுடன் இருப்பதாகவும், ஒரிரு நாளில் வீடு திரும்புவார் என்றும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.