டிஎஸ்பி படத்தின் பிரத்யேக போட்டோஸ்.... மாஸ் காட்டும் விஜய் சேதுபதி....

By செந்தில்வேல் – November 24, 2022

18

Share E-Tamil Newsவருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன் போன்ற பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்த இயக்குனர் பொன்ராம் தற்போது விஜய் சேதுபதியை வைத்து ‘டிஎஸ்பி’ படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக அனுகீர்த்தி எனும் புதுமுக நடிகை நடித்துள்ளார். படத்தை கார்த்திக் சுப்புராஜ் தயாரித்துள்ளார். இவர்களோடு குக் வித் கோமாளி புகழ், நடிகை ஷிவானி, ஷாந்தினி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

 

நடிகர் விஜய் சேதுபதி மிரட்டலான போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இப்படத்திற்கு டி இமான் இசையமைத்து உள்ளார். டி எஸ் பி திரைப்படம் வருகிற டிசம்பர் மாதம் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது.

 

ராயல் என்ஃபீல்டு பைக்கில் விஜய் சேதுபதி போலீஸ் கெட்டப்பில் வருவது போல் காட்சி இந்த படத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்டரில் இடம் பெற்றிருந்தது, அதே போல படத்தின் ஃபஸ்ட் சிங்கிள் பாடலும் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்பை அதிகரித்தது. தற்பொழுது படத்தின் பிரத்தியேக புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.