நடிகர் அஜித்-சிவகார்த்திகேயன் தீடீர் சந்திப்பு.....

By செந்தில்வேல் – November 23, 2022

114

Share E-Tamil Newsநடிகர் அஜித்குமார்- H.வினோத்- போனிகபூர் 3வது முறையாக இணையும் படம் 'துணிவு'. இந்த படத்தை H. வினோத் இயக்க, நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, தயாரிப்பாளர் போனி கபூர்  தயாரிக்கிறார். இந்த படத்தின் கலை இயக்குனராக மிலன் பணிபுரிய, சண்டை காட்சிகளை சுப்ரீம் சுந்தர் வடிவமைப்பு செய்கிறார்‌‌.  இப்படத்தின் இரண்டு போஸ்டர்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. வரும் 2023 பொங்கலுக்கு துணிவு படம்

திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் நடிகர் அஜித் உடன் சிவகார்த்திகேயன் தீடீரென சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. சிவகார்த்திகேயனிடம் நடிகர் அஜித் பாசிட்டிவ் ஆக பேசியுள்ளார். மேலும் சிவகார்த்திகேயன் கூறும்போது.. .அதில், நான் அஜித் சாரை சந்திக்கும் போதெல்லாம் ஒரு எனர்ஜி கிடைக்கும், அவரை அடிக்கடி சந்திக்க மாட்டேன்.ஆனால், அஜித் சாரை சந்திக்கும் போதெல்லாம் எனக்கு பல அறிவுரைகளை வழங்குவார் என்று இவ்வாறு தெரிவித்துள்ளார்.